மனைவிக்கு பதில் வேறொரு பெண்ணிற்கு காதலர் தின வாழ்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரர்
பிரபல கிரிக்கெட் வீரர் மனைவிக்கு காதலர் வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஸ்மித்
நேற்று காதலர் தினம் என்பதால் அனைவரும் தங்களது மனைவி மற்றும் காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வந்தனர்.
அந்த வகையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஸ்மீத் தனது மனைவி டேனி வில்லீஸிற்கு வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நிலையில், இதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் இந்தியா வந்துள்ளார்.
நாக்பூர் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலயைில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 18ம் தேதி நடக்கவிருக்கின்றது.
மனைவிக்கு காதலர் தின வாழ்த்து
இந்நிலையில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு ஸ்டீவ் ஸ்மித் வாழ்த்து கூறியுள்ளார்.
அதாவது டுவிட்டரில், அழகான மனைவி டேனி வில்லீஸூக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் சிறிது நாட்களில் உன்னை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு வாழ்த்துக்களை சரியாக எழுதிவிட்டு, டேக் செய்த நபரை தவறாக தெரிவு செய்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித்தின் மனைவி டேனி வில்லீஸ் Dani_willis என்ற பெயரில் இன்ஸ்டாவில் ஆக்டீவ்வாக இருந்து வருகின்றார்.
ஆனால், டுவிட்டரில் டி.குயீன் என்ற வேறு ஒருவர் இருக்கும் நிலையில், சற்றும் சிந்திக்காத ஸ்டீவ் ஸ்மித், தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், கணவரை சந்திக்க விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.