வித்தியாசமான முறையில் காதலர் தின வாழ்த்து கூறிய அறந்தாங்கி நிஷா! என்ன செய்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் நிஷா அவருடைய கணவரை தன்னுடைய தலைக்கு மேல் தூக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மீடியாத்துறைக்கு அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் போட்டியாளராகவும், சப்போடிவ் நடிகையாவும் பணியாற்றி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நிஷா.
இவரின் நிறத்தை பார்த்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் தன்னுடைய தனித்திறமையால் மீடியாத்துறையில் மிளிர்ந்து வருகிறார்.
இவரை யாரும் கலாய்த்தாலும் இதனை நகைச்சுவையாக மாற்றி தன்னுடைய இலட்சிய பாதையில் நடந்து வருவதுடன், சினிமா துறையிலும் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி 2” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் நயனின் “கோலமாவு கோகிலா”திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள், பிக்பாஸ் என பல திறமைகளால் இன்றும் மீடியாத்துறையில் நிலைத்திருக்கிறார். வெள்ளத்திரையிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

கணவரை தூக்கிய நிஷா
இந்த நிலையில் இன்றைய தினம் உலக காதலர்கள் தினம் என்பதால் தன்னுடைய கணவரை தூக்கிய படி இருக்கும் புகைப்படத்தை போட்டு ஒரு பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் என்னுடைய வாழ்க்கையை தூக்கியவர் என்னுடைய கணவர் தான் எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் “கணவர் மனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும் ”எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்கள்.