ஆப்பிள் சாதனங்கள் எவ்வாறு களவாடப்படுகின்றன? தடுப்பது எப்படி?
தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு அதிகமாக முன்னேற்ற பாதையில் பயணிக்கின்றதோ அதே அளவு வேகத்தில் குற்றச் செயல்களும் அதிகரித்துச் செல்கின்றன.
உங்களது கைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது சற்று சவால் மிக்க விடயமாக காணப்படுகின்றது.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன்களை களவாடியவர்கள் ரெக்கவரி மோட் என்னும் வழிமுறையை பயன்படுத்தி ஏற்கனவே பயன்படுத்திய பழைய பயனரின் தகவல்கள் அனைத்தையும் அழித்து, புதிய தொலைபேசியாக அதனை மாற்றி சந்தையில் விற்பனை செய்யக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனினும் ஆப்பிள் சாதனங்கள் அவ்வாறு எளிதில் களவாட முடிவதில்லை அதாவது ஆப்பிள் சாதனங்களை களவாடினாலும் அவற்றை புதிய சாதனமாக மாற்றுவது சவால் மிக்கதாக காணப்படுகின்றது.
இதற்கு ஆப்பிள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் என்பன தேவைப்படுகின்றன. எவ்வெறெனினும் அண்மைக் காலங்களில் இந்த இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும் ஊடறுத்து செல்லக்கூடிய நவீன நுட்பங்களை களவாடும் நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரை காலமும் ஆப்பிள் சாதனம் ஒன்று களவாடப்பட்டால் அதன் பாகங்களையே விற்பனை செய்து வந்தனர்.
எனினும் தற்பொழுது நபர் ஒருவர் ஆப்பிள் சாதனம் ஒன்றை தொலைத்து விட்டால் அவர் பைண்ட் மை (Find My) என்னும் செயலியை பயன்படுத்தி தனது சாதனம் எங்கு இருக்கின்றது என்பதனை தேடி கண்டறிந்து கொள்ள முடிகின்றது.
இதே செயலியை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் சாதனத்தை புதிய சாதனமாக மாற்றிக்கொள்கின்றனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொலைத்தவர் தனது சாதனத்தை தேடுவதற்காக அனுப்பும் செய்திகளுக்கு பதில் செய்தி அனுப்பி, அப்பிள் இணைய தளத்தை போன்ற போலி இணையதளமொன்றின் ஊடாக அப்பிள் ஐ.டி மற்றும் பாஸ்வர்ட் என்பனவ்றை உள்ளீடு செய்யச்சொல்லி அப்பிள் சாதனத்தை ஏற்கனவே பயன்படுத்தியவரின் கட்டுப்பாட்டிலிருந்து பூரணமாக விடுவிக்க கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
உங்களது ஐபோன் களவாடப்பட்டால்?
1. உங்களது சாதனம் களவாடப்பட்டது என்பதனை Find My'செயலியின் ஊடாக அறிவிக்கவும்.
2. Find My' ஊடாக உங்களது சாதனத்தை அழிக்கவும்.
3. உங்களது போன் கவளாடப்பட்டது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யவும் அல்லது இணைய வழியில் முறைப்பாடு செய்யவும்.
4. இந்த முறைப்பாட்டு கொப்பி மற்றும் தொலைபேசி கொள்வனவு செய்யப்பட்டமைக்கான ஆதாரம் என்பனவற்றை பகிர்வதன் மூலம் தொலைபேசி சேவை வழங்குனர்கள் IMEI இலக்கத்தை கொண்ட சாதனத்தை முடக்குவார்கள்.