ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துவோர் எவ்வாறு 5G சேவையை பெற்றுக்கொள்ள முடியும்?
ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துவோர் 5ஜீ அலைக்கற்றை வசதியை இலகுவில் பெற்றுக்கொள்ள இந்தியாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 1ம் திகதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜீ தொழில்நுட்பத்தை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தார்.
பாரதீ எயார்டெல் மற்றும் ஜீயோ ஆகிய சேவைகள் 5ஜீ சேவையை ஆரம்பித்துள்ளன.
எவ்வாறெனினும் இந்த சேவை அநேகமான முதன்மையான ஸ்மார்பேசிகளிலும், ஐபேசிகளிலும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. மென்பொருள் அப்டேட் செய்யப்படாமையினால் இந்த நிலை காணப்படுகின்றது.
ஐபோன் பயன்படுத்துவோர் இனி இதற்காக காத்திருக்க வேண்டியதில்லை.
ஆப்பிள் ஐபோன் பயனர்கள் 5ஜீ சேவையை பெற்றுக்கொள்ள முடியும். தொலைதொடர்பு சேவை நிறுவனம் 5ஜீ சேவையை உங்களது நகரத்திற்கு வழங்கினால் நீங்கள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆப்பிள் நிறுவனம் பீட்டா அப்டேட் ஒன்றை செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது ஐபேசிகளை அப்கிரேட் செய்துகொள்ள முடியும்.
iPhone 12 அதன் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட ஐபேசிகளில் இந்த 5ஜீ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஐபேசியின் மென்பொருளை அப்டேட் செய்வதன் மூலம் 5ஜீ சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
Apple Beta Software Program இணைய தளத்தின் ஊடாக மென்பொருளை அப்டேட் செய்ய முடியும்.
இது ஓர் பீட்டா வேர்சன் என்பதனால் சில சிக்கல் ஏற்படக்கூடும் என்பதனை மறுப்பதற்கில்லை.
ஆப்பிள் மென்பொருளை எவ்வாறு அப்டேட் செய்வது?
- செட்டிங்ஸை ஓபன் செய்யவும்
- ஜெனரல் ஒப்சனை தெரிவு செய்யவும்
- software update என்பதனை சொடுக்கவும்
- iOS 16.2 என்ற பீட்டா வெர்சன் மென்பொருளை நீங்கள் தரவிறக்கிக் கொள்ள முடியும்
- உங்களது போனை ரீஸ்டார்ட் செய்யவும்
5ஜீ தொழில்நுட்பத்தை ஆக்டிவேட் செய்ய
- செட்டிங்ஸை ஓபன் செய்யவும்
- மொபைல் டேட்டாவை சொடுக்கவும்
- மொபைல் டேட்டா ஆப்ஷனில்
- வீடியோ என்ட் டேட்டா ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
- 5ஜீ ஆப்ஷனை தெரிவு செய்க