சாப்பாடு பிளேட்டுடன் கடத்தப்பட்ட பிரியங்கா.. வலை வீசி தேடி வரும் விஜய் டிவி குழுவினர்!
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவை காணவில்லை என்ற ஒரு வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளர் பயணம்
விஜய் தொலைக்காட்சியின் தூண்களாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் பிரியங்கா.
இவரின் பேச்சு திறமையை அடித்து கொள்ள இன்றும் தொலைக்காட்சியில் ஆள் இல்லையென்று தான் கூற வேண்டும்.
மேலும் பிரியங்காவின் நிகழ்ச்சிகள் அவரின் காமெடியை பார்க்கவே தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பிரியங்கா பிக்பாஸிலும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போதும் மக்கள் மத்தியில் பலத்த சப்போர்ட் கிடைத்தது. ஆனாலும் இவரால் டைட்டில் வின்னர் அடிக்க முடியவில்லை.
திடீரென மாயமான பிரியங்கா
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா கடத்தப்பட்டுள்ளார் என்ற ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் காட்டப்படும் காட்சியில் பிரியங்கா சாப்பாடு பிளேட்டுடன் இருப்பது போன்று காட்டப்படுகின்றது.
இதனை தொடர்ந்து பிரியங்காவை காணவில்லை என தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பது போன்று இந்த காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், “பப்ளிசிட்டிக்காக இந்த வீடியோக்காட்சி எடுக்கப்பட்டிருக்கலாம்” என கருத்து வெளியிட்டுள்ளார்கள்.