ஈரமான ரோஜாவே 2 சீரியலை விட்டு விலக போகிறாரா ப்ரியா?
ஈரமான ரோஜாவே 2 சீரியலை விட்டு ப்ரியா வெளியேறப் போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விறுவிறுப்பான தருணங்கள்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே 2.
இந்த சீரியலில் காதலித்தவனை விட்டு வேறொருவரை திருமணம் செய்தால் அவர்களின் மனநிலை மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என அழகாக காட்டி வருகிறார்கள்.
மேலும் ப்ரியா, ஜீவா, பார்த்தி, காவ்யா, மாமா, அத்தை என ஏராளமான கதாபாத்திரங்கள் நடித்து வருகிறார்.
சமூகத்தில் நடக்கும் அத்தனை விடயங்களையும் எபிசோட் எபிசோட்டாக காட்டி வருகிறார்கள்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில் ஜீவா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கும் ப்ரியா சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த தகவலை கேட்ட ஈரமான ரோஜாவே 2 ரசிகர்கள் குழம்பி போய் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான நடிகர் திரவியத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஷீட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து ப்ரியா அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் சற்று ஆதரவாக இருக்கிறது என கமண்ட் செய்து வருகிறார்கள்.