சின்னத்திரை பிரபலங்களை கதறி கதறி அழ வைத்த இயக்குநர்! உலகை விட்டு பிரிந்த சோகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே 2” சீரியலின் இயக்குனர் திடீர் மரணம் அடைந்திருந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரமான ரோஜாவே 2 சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கும் சீரியல் “ஈரமான ரோஜாவே 2”.
இந்த சீரியலில் மற்றைய சீரியல்களை விட சற்று வேறுவிதமாக கதை நகர்த்தப்படுகிறது.
காதலித்த நபர்களை விட்டுவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ளும் காதலர்கள், வாழ்க்கையின் ஓட்டத்தில் எப்படி மாறுகிறார்கள் என்பதே கதையம்சம்.
திடீர் மரணம்
இந்நிலையில் இந்த சீரியலின் இயக்குநர் தாய் செல்வம் என்பவர் திடீர் மரணம் அடைந்துள்ளார்.
இவர் சின்னத்திரையில் காத்து கருப்பு, தாயுமானவன், கல்யாண முதல் காதல் வரை, மௌன ராகம் சீசன் 1, நாமிருவர் நமக்கிருவர், பாவம் கணேசன் போன்ற பிரபலமான சீரியல்களை இயக்கியுள்ளார்.
மேலும் இவரின் இறுதிகாலக்கட்ட சீரியலாக “ஈரமான ரோஜாவே 2” சீரியல் பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையுடன் நின்று விடாமல் எஸ் ஜே சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் இயக்கியுள்ளார்.
அந்த வகையில் இவரின் மரணம் சின்னத்திரை பிரபலங்கள் பலரை பாதித்துள்ளது. இந்த நிலையில் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில் நடித்த “ரக்ஷா” தாய் செல்வம் இறப்பிற்கு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உருக்கமான பதிவு
இதில், “எங்கிருந்து தொடங்குவது என்று எனக்கே தெரியவில்லை தாய் சார். நீங்கள் தான் எனது மிகப்பெரிய பலம் மற்றும் எனது மிகப்பெரிய விமர்சகர். நான் நடித்து கேரக்டருக்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள்.
நீங்கள் இனி இல்லை என்று நினைப்பது கூட ஒரு அதிர்ச்சி மற்றும் மிகவும் பேரழிவை ஏற்படுத்துகின்றது. எனக்கு பிடித்த இயக்குனராக இருங்கள் உங்கள் பணி என்றென்றும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.
அது மட்டுமல்லாமல் உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நபரை நான் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை ஒரு சிறந்த கலைஞனாக உருவாக்கி உங்கள் சொந்த குடும்பத்தைப் போல என்னை நடத்தியது.
என்னால் முடியவில்லை நீங்கள் எங்களை சுற்றி இல்லை என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. எந்த வேலையிலும் உங்கள் மீதுள்ள என் அன்பு என்றும் மறையாது. அனைவரையும் நேசிக்கும் தாய் செல்வம் சாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். லவ் யூ, தாய் சார் நிம்மதியாக ஓய்வெடுங்கள்…
எல்லாவற்றுக்கும் நன்றி சார். நான் இதை எனது சமூக வலைத்தள பக்கங்களில் இப்படி பதிவிடுவேன் என்று நினைக்கவே இல்லை, உண்மையில் இது பெரிய வலி தான்” என பார்ப்பவர்களை கவலையுட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ரக்ஷாவுக்கு ஆறுதல் கூறியுள்ளாரகள்.