உலக அளவில் டிரெண்ட் ஆன முதலவர் ஸ்டாலின்... அப்படியென்ன டுவிட்டரில் டேக் பண்ணாங்கனு தெரியுமா?
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவைக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட நிலையில் "நாங்கள் ஸ்டாலின் உடன் நிற்கிறோம்" என்று பொருள்படும் வகையில் #WeStandWithStalin என்ற டேக் டிரெண்ட் ஆனது. இது உலக அளவில் இன்று மாலை டிரெண்ட் ஆனது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் கொரோனா வார்டிக்குள் முழுகவச உடையில் சென்றுள்ளார்.
கொங்கு மண்டலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்வர் ஸ்டாலின் இப்படி நேரடியாக பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்றது மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவைக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட நிலையில் "நாங்கள் ஸ்டாலின் உடன் நிற்கிறோம்" என்று பொருள்படும் வகையில் #WeStandWithStalin என்ற டேக் டிரெண்ட் ஆனது.
இது உலக அளவில் இன்று மாலை டிரெண்ட் ஆனது. கோவையில் உள்ள மக்கள், தமிழக முழுக்க உள்ள திமுகவினர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று இந்த டிவிட்டை செய்தனர்.
1,60,000 டிவிட்களை தாண்டி இதில் மக்கள் பலர் டிவிட் செய்தனர். முக்கியமாக ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து மருத்துவமனைக்கு சென்றதை பாராட்டி பலர் டிவிட் செய்தனர்.

இதன் காரணமாக மாலை 4 மணி முதல் 6 மணி நேரம் உலக டிரெண்டில் #WeStandWithStalin டேக் 7ம் இடத்திலும் நான்காம் இடத்திலும் பின் 4ம் இடத்திலும் இருந்தது.
அதே சமயம் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் சிலர் #GoBackStalin என்ற டேக்கை டிரெண்ட் செய்தனர். இதுவும் சில நிமிடங்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
ஆனால் ஸ்டாலினின் மருத்துவமனை விசிட்டுக்கு பின் மக்கள் பலர் முதல்வருக்கு ஆதரவாக டிவிட் செய்ய தொடங்கிய நிலையில் #GoBackStalin பின்னுக்கு சென்றது.

