மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் அழகிரியை சந்திக்காதது ஏன் தெரியுமா?
அரசுமுறை பயணமாக மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணன் அழகிரியை சந்திக்காதது ஏன் என்பதற்கு தற்போது விடைகிடைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மாபெறும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக அரசு, கொரோனா ஒழிக்க பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சில மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார், அதில் மதுரையும் ஒன்று.
இந்த பயணம் தொடங்கும் போதே, அண்ணன் அழகிரியை சந்திக்கலாம் என கூறப்பட்டது, ஆனால் அரசு முறைப்பயணமாக வந்ததால் அண்ணனை சந்திக்காமல் சென்றுவிட்டாராம் ஸ்டாலின்.
ஒருவேளை அண்ணனை சந்தித்தால், அது குடும்ப பயணம் போன்று தெரியும் என்பதாலும், தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கும் என்பதால் இந்த சந்திப்பை தவிர்த்து விட்டாராம்.
இதுபற்றி அண்ணன் அ்ழகிரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக முதல்வர் தரப்பில் கூறப்படுகிறது, மதுரை பயணத்தில் எந்தவொரு ஆடம்பர வரவேற்பும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.