ரூ.15 லட்சத்துடன் பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?
ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ருதி வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி கட்டத்தில் பிக்பாஸ் அல்டிமேட்
பிக்பாஸ் போட்டியாளர்களை கொண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேமட் நிகழ்ச்சி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பாலா, ஜூலி, ஸ்ருதி, அபிராமி, நிரூப் உள்ளிட்ட பல முக்கியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
60 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட்டை, நடிகர் சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

கேரளாவில் சாமி தரிசனம் செய்த அஜித்தின் புகைப்படங்கள் வைரல்
பணத்துடன் வெளியேறிய ஸ்ருதி
தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் மணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் 3 லட்சம் மற்றும் 5 லட்சம் என படிப்படியாக தொகையை வைத்த பிக்பாஸ், விரும்புபவர்கள் அந்த தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் எனக் கூறியிருந்தார்.
பணப்பெட்டியை எடுப்பதில் ஜூலி மற்றும் ஸ்ருதி இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது, 15 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டதும் இருவரும் மோதிக் கொண்டனர்.
ஆனால் யாராவது ஒருவர் மட்டுமே வெளியேற முடியும் என்பதால், இருவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.
அதில் இரண்டு சுற்றுகளிலும் ஸ்ருதி முன்னிலையில் இருப்பதால் அவரே பணப்பெட்டியுடன் வெளியே சென்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகன் பிறந்த சில நாட்களில் ஆல்யாவின் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!