கேரளாவில் சாமி தரிசனம் செய்த அஜித்தின் புகைப்படங்கள் வைரல்
இன்று அதிகாலை கேரளாவில் உள்ள பெரும்புவா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் அஜித் குமார்.
அஜித்தின் 61வது படம்
நடிகர் அஜித்தின் 61வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார், நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ளனர், போனி கபூர் தயாரிக்கிறார்.
வலிமை படத்தின் போது யுவனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

திடீர் சாமி தரிசனம்
இந்நிலையில் கேரளாவில் உள்ள பெரும்புவா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றன.
நீண்ட தாடி, மீசையுடன் வெள்ளை நிற வேட்டி மற்றும் துண்டுடன் மிக எளிமையாக வந்த அஜித் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
சில வாரங்களுக்கு முன்பு அஜித், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் டிரைலர் வரும் முன்னே கிளம்பிய சர்ச்சை! ஆர்வமே இல்லாமல் படக்குழு- என்ன நடக்கிறது?

