கும்பத்தில் சேரும் 4 கிரகங்கள்: நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிக்கு தான்!
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் நிலையானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
கிரகங்கள் அவ்வப்போது தங்களின் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கும் அதேநேரம் குறிப்பிட்ட ஆற்றல் வாய்ந்த கிரங்கள் இணையும் போது, ராஜ யோகங்களை உருவாக்கும்.

அந்த வகையில் மார்ச் மாத ஆரம்பத்தில், சனி பகவானின் கும்ப ராசியில் 4 கிரகங்கள் ஒன்றிணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இதன் போது கிரகங்களின் ராஜாவான சூரியனும், புத்திகாரகனான புதனும், நிழல் கிரகமான ராகுவும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் கும்ப ராசியில் இணைந்திருப்பர்.
குறித்த சதுர்கிரக யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும், பொருளாதார ரீதியில் அமோக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
இவர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புகள் இந்த காலகட்டத்தில் வெற்றியளிக்கும், குறிப்பாக பொருளாத நிலையில் இவர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
புதிய நண்பர்களால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையும். இதனால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் நீண்ட நாள் கவலைகள் நீங்கும் வகையில் வாழ்வில் வெற்றிகளும் செல்வ செழிப்பும் குவியப்போகின்றது.
வெளிநாட்டு ஏற்றுமதியுடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகின்றது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலனை மொத்தமான அனுபவிக்கும் வாய்ப்பு உருவாகும்.
புதிய வருமான ஆதாரங்கள் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். வணிகத்தில் புதிய திட்டங்களால் நல்ல லாபம் உண்டாகும்.மனநிலையில் உச்சாகம் பிறக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளதால் இந்த ராசியினருக்கு பணவரவுக்கு பஞ்சமே இருக்காது. இதுவரை காலமும் இல்லாத வகையில் ஆடம்பட வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
முன்னைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் செய்யும் புதிய முதலீடுகளீடுகளும் எதிர்காலத்தில் பாரிய லாபம்தை கொடுக்கும். சூரியின் ஆசியால் அதிகாரம் மிக்க பதவியில் அமரும் வாய்ப்பு காணப்படுகின்றது.
குடும்பத்தினரின் அன்பும் முழுமையான ஆதரவும் கிடைக்கும். அதனால் அதீத ஆற்றலுடன் தொழிலில் ஈடுபாடு காட்டுவீர்கள்.நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |