Srilankan Watalappam : நோன்பு திறக்க நாவூரும் சுவையில் வட்டிலப்பம்... வெறும் 3 பொருள் போதும்
ரமலான் மாதத்தில் நோன்பு திறக்க குழந்தைகள் முதல் பொரிவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வட்டிலப்பத்தை இலங்கையர் பாணியில் வெறும் 3 பொருட்களை கொண்டு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பட்டி 1 -கப்
முட்டை -4
கெட்டியான தேங்காய் பால் -1கப்
சுக்கு தூள் -சிறிதளவு
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு- 2-3
ஏலக்காய்- 3
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் கருப்பட்டி சேர்த்து, அதனுடன் ஒரு கப் அளவுக்கு தண்ணீர், சுக்கு தூள், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த கருப்பட்டி பாகை கட்டிகள் இன்றி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்பு இதனுடன் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டி பாகு மற்றும் ஒரு கப் கெட்டியான தேங்காய் பால் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக பீட் செய்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் எந்த பாத்திரத்தில் வட்டிலப்பம் செய்ய வேண்டுமோ இந்த பாத்திரத்திற்கு மாற்றி அலுமினிய ஃபாயில் கவரால் நன்றாக மூடிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து டபள் ஃபாயில் முறையில் வட்டிலப்ப கலவையை வேகவைத்து எடுத்து, ஆறவிட்டால், அவ்வளவு தான் அருமையான சுவையில் வட்டிலப்பம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
