Srilankan Veg Rava Upma: இலங்கையின் ஆரோக்கியமான ரவா உப்புமா எப்படி செய்யலாம்?
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் பழமையானவை மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானவை. நம் முன்னோரின் ஒரு கொள்கை உண்டு ' உணவே மருந்து, மருந்தே உணவு '. இந்த உணவுகளில் ஆரோக்கியமான மூலிகைகள், நறுமணப் பொருட்கள், முளைகள், காய்கறிகள் கொண்டவை.
நாகரிக அடிப்படையில், பெருநிறுவனங்களால் நாம் இந்த உணவுகளை மறந்து விட்டோம். இதில் மிக சில உணவுகளை மட்டும் நாம் பண்டிகை அன்று செய்கிறோம். இந்த உணவுகள் பர்கர் பிட்சா போன்ற துரித உணவுகளை விட மிக சுவையானவை.
அப்படி தமிழர்களின் ஒரு ஆரோக்கியமான உணவில் ஒன்றாக தான் இந்த ராவா உப்புமா எப்படி செய்யலாம் என்பதை பார்க்க போகிறோம். இதை வேலைக்கு போகும் போது காலை உணவாக எடுத்துச்செல்லலாம். குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு 02
- கத்தரிக்காய் 01
- வெங்காயம் 01
- கரட் 02
- லீக்ஸ் 200 கிராம்
- ரவா 2 கப்
- பச்ச மிளகாய் 5
- தேங்காய் பால் 2கப் (தண்ணீர் 2 கப் கலக்கவும்)
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரட் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் வெட்டிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் பச்ச மிளகாயை சேர்க்க வேண்டும்.
இவை அரை பதத்தில் வதங்கி இருந்தால் போதும். இதன் பின்னர் கடுகு சேர்க்க வேண்டும். இதனுடன் மஞ்சள் சேர்க்க வேண்டும். பின்னர் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். பால் கொத்தித்தவுடன் ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். இதை நன்றாக கட்டி இல்லாமல் உடைத்து விட வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து லீக்ஸ் சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கிளறி விட்டு பொறித்த உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காயை சேர்க்க வேண்டும்.
இப்படி செய்யதால் உதிரி உதிரியான உப்புமா தயார்.
ராவா சாப்பிடும் பயன்கள்
ரவாவில் நாம் உப்புமா சாப்பிட்டால் அது நமக்கு நிறைவாக சாப்பிட உணர்வைத் தரும். உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கிறது. எனவே உடல் பருமனாக இருப்பவர்கள் உப்புமா சாப்பிட்டால் எடை குறையும்.
இதில் ரும்புச் சத்து நிறைந்து இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சோகை என்பது இரும்புச் சத்து குறைபாட்டால் வரக்கூடிய பிரச்னை ஆகும். எனவே இந்த பிரச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிடுவது நன்மை தரும்.
ரவாவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து. பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இதில் இருக்கிறது.
இதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ரவா உப்புமாவில் சேர்க்கப்படும் காய்கள் அனைத்தும் நார்சத்து நிரம்பியவை. இது செரிமானத்தை தூண்டும். மேலும். மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.
ரவா, உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவை குறைகிறது. நல்ல ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேரும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |