ஜனனிக்கு அடுத்து நியூ எண்ட்ரி கொடுக்கும் பிரபலம்! வரவேற்பை பலப்படுத்தும் நெட்டிசன்கள்
தென்னிந்தியாவில் நடக்க போகும் “சரிகமப ஜூனியர் இசை” தேர்வில் இலங்கை சேர்ந்த சிறுமியொருவர் தெரிவாகியுள்ளார்.
திறகைக்கான வாய்ப்பு
பிரபல தொலைக்காட்சியில் சிறுவர்களில் ஒளிந்திருக்கும் இசை திறமையை வெளியுலகிற்கு கொண்டு வரும் ஷோ தான் சரிகமப ஜூனியர் இசை.
இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளில் மற்றும் பல பிரதேசங்களில் உள்ள திறமை வாய்ந்த பாடகர்கள் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் இலங்கை - யாழ்ப்பாணத்தை சார்ந்த பிரபல பாடகியான உதயசீலன் கில்மிசா கலந்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கை சார்ந்த பல கலைஞர்கள் அவர்களின் திறமைகேற்ப வெளியுலகிற்கு அறிமுகமாகி வருகிறார்கள்.
இலங்கை பாடகி கில்மிசா
இந்த வரிசையில் அடுத்து வருபவர் தான் பிரபல பாடகியான உதயசீலன் கில்மிசா. இது தொடர்பில் கில்மிசா கருத்து வெளியிட்டு அவரின் சந்தோசத்தை மற்றைய சமூக வலைத்தள பயனர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது, “இந்த வாய்ப்பு அவரின் திறமை வெளிகாட்ட சிறந்த வாய்ப்பு” என அவர் கூறியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இலங்கை ரசிகர்கள் குறித்த பாடகிற்கு தங்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறார்கள்.