மேடையில் பாடும் போது பாடகர் கே கே பட்ட அவஸ்தை! மரணம் இயற்கைக்கு மாறானதா?
பாடகர் கே.கே என்று அனைவராலும் அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் இறப்பு இயற்கைக்கு மாறானது என்று புகார் அளிக்கப்பட்டதுடன், அவரது மரணத்திற்கு காரணமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் கே. கே
பாடகர் கே கேகொல்கத்தாவில் உள்ள குருதாஸ் கல்லூரியின் விழாவொன்றில் இசை கச்சேரி நிகழ்த்த சென்ற வேலையில், அங்கு ஏற்பட்ட அசௌகரியத்தால் ஹொட்டலுக்கு திரும்பிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவர் மயக்கம் அடைந்த உடன் இரவு 10.30 மணிக்கு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
கே.கேயின் மரணம் இயற்கைக்கு மாறானதா?
கே.கேயின் மரணத்தை `இயற்கைக்கு மாறான மரணம்' என வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருவதுடன், அவரது முகத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.
இறப்பிற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செய்யப்பட, கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனையில் இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை, வழக்கத்துக்கு மாறாக அவர் வியர்வையில் நனைந்தவண்னம் இருந்தார். மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
குளிர்சாதனம் வேலை செய்யாமல் இருந்தது ஒருபுறம் இருந்தாலும், 2000 பேர் இருக்க வேண்டிய அரங்கில் 6 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் இருந்ததாகவும், கூட்டத்தினை கட்டுப்படுத்த தீ அணைப்பானை பயன்படுத்தியதே இவரது மரணத்திற்கு காரணம் என்று சர்ச்சை எழு்நதுள்ளது.
இவரது மரணத்தை அறிந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
AC wasn't working at Nazrul Mancha. he performed their and complained abt it bcoz he was sweating so badly..it wasnt an open auditorium. watch it closely u can see the way he was sweating, closed auditorium, over crowded,
— WE जय (@Omnipresent090) May 31, 2022
Legend had to go due to authority's negligence.
Not KK pic.twitter.com/EgwLD7f2hW