இலங்கை ஜனாதிபதி சிம்மாசனத்தில் அமர்ந்த சாமானிய பெண்மணி - அடடே அந்த கம்பீரம்
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதிபர் மாளிகையின் ராஜ சிம்மாசனத்தில் சாமான்ய பெண்மணி ஒருவர் புன்னகை முகத்தோடு அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
மக்கள் புரட்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை அதிபர் கோத்தபய தப்பியோடியதை தொடர்ந்து, அவர் வசித்த அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
அதே வேளை, சிம்மாசனத்தில் அமர்ந்தும், சொகுசான படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும் தங்கள் வெற்றியை மக்கள் கொண்டாடினர்.
போராட்டக்காரர்கள் குழுவில் இருந்த பெண்மணி ஒருவர், அதிபர் மாளிகையில் வீற்றிருந்த கம்பீரமான இருக்கையில் அமர்ந்து புன்னகையோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் வெளியாகி தற்போது தீயாகப் பரவி வருகிறது.