இலங்கை சிறுமிக்கு நண்பனான முள்ளம்பன்றி.... சிலிர்க்க வைக்கும் பாசம்
இலங்கை சிறுமி ஒருவர் முள்ளம்பன்றி ஒன்றுடன் நட்பாக பழகிவரும் காணொளி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை சிறுமி
பொதுவாக விலங்குகள் என்றால் குழந்தைகளுக்கு அதிகமான பயம் காணப்படும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொஞசி விளையாடுவது என்பது இயல்பான ஒன்றே.
அதுவே காட்டில் வாழும் விலங்குகளிடம் அன்பாகவும், நட்பாகவும் பழகமுடியுமா? என்றால் பலரது கேள்விக்கு பதில் இல்லை என்று தான் வரும்.

அந்த அளவிற்கு காட்டில் வாழும் விலங்குகள் ஆபத்தானவையாக இருக்கும். அவ்வாறான ஒரு மிருகம் தான் முள்ளம்பன்றி. உடல் முழுவதும் முட்களை வைத்து எதிரிகளை அதன் மூலம் தலைதெறிக்க ஓட வைத்து, தான் தப்பிக்கும் விலங்கு ஆகும்.
அப்படியான முள்ளம்பன்றியிடம் இலங்கை சிறுமி ஒருவர் நட்பாக பழகி வருகின்றார். குறித்த முள்ளம்பன்றியும் அந்த சிறுமியுடன், நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி பின்னே செல்வது போன்று செல்கின்றது.
வயல்வெளியில் முள்ளம்பன்றியுடன் நடந்து செல்வது மட்டுமின்றி, அதனை மேஜை ஒன்றின் மீது வைத்து சாப்பாடு கொடுத்து கொஞ்சியும் விளையாடியுள்ளார்.
மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொள்ளை கொண்ட இலங்கை சிறுமியின் பாசக்காட்சி இதோ.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |