பிரான்ஸில் சூரிய வெப்பத்தில் முட்டை பொரிக்கும் இளைஞன் - காணொளி வைரல்
பிரான்ஸ் இளைஞர் ஒருவர் வெப்பத்தின் தாக்கத்தை பயன்படுத்தி முட்டை பொரிக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

சூரிய ஒளியில் முட்டை
பூமியின் சில பகுதிகளில் கோடைக்காலம் எப்போதுமே சுட்டெரிக்கும் வெப்பத்துடன் இருக்கும்.
நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருவதால் மக்கள் தற்போது பெரும் சீரழிவை சந்தித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் தற்போது ஒரு காணொளி வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில், ஒருவர் தனது பால்கனியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தில் ஆம்லெட் பொரிப்பது காட்டப்பட்டது.

மேலும் அந்தப் பாத்திரத்தின் மேற்பரப்பு மிகவும் சூடாகும் அளவுக்கு ஜன்னலுக்கு வெளியே வெயிலில் நீண்ட நேரம் அந்த பாத்திரம் வைக்கப்பட்டிருந்நது. பிறகு அந்த நபர் சாதாரணமாக ஒரு முட்டையை உடைத்து வாணலியில் போட்டார்.
ஆச்சரியப்படும் விதமாக, அது விரைவாக ஆம்லெட்டாக மாறியது. இந்த காணொளி தற்போது வைரல்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் கோடைக்கால வெப்ப அலை தீவிரமாகியுள்ளது.
நாள்தோறும் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாவதால், அதீத வெப்பம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். பிரான்ஸில் மட்டும் கடந்த வாரம் வெப்பத்தின் தாக்கத்தால் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த காணொளிக்கு தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றர். நாடு முழுவதும், குளிரூட்டிகள் மற்றும் மின்விசிறிகள் விற்றுத் தீர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
முதியவர்கள் மற்றும் கடும் வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்காக, பிரான்ஸ் அரசு, வீடுகளில் குளிரூட்டிகளைப் பொருத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. அரசியல் விவாதம்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |