நடிகர் ஸ்ரீகாந்த் பட்ட அவமானங்கள்... நண்பன் படத்தில் இவர் செய்த தவறு என்ன?
நடிகர் ஸ்ரீகாந்த் தான் பட்ட அவமானங்கள் குறித்தும், நண்பன் படத்தில் தன்னால் ஏற்பட்ட பிரச்சினை குறித்தும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். இப்படத்தைதொடர்ந்து பல படங்கள் நடித்தார்.
ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியடைய ஆரம்பித்துள்ள நிலையில், இவர் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அவ்வாறு தனக்கு நடந்த கஷ்டத்தை குறித்தும், நண்பன் படத்தில் தான் செய்த தவறு குறித்தும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ரோஜா கூட்டம் படத்தில் ஒரு லட்சம் சம்பளம் பெற்ற இவர், ஏப்ரல் மாதத்தில் படத்தில் 24 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். இப்படத்தில் போடப்பட்ட பாடல்கள் பிடிக்காததால், இசையமைப்பாளர் யுவனிடம் கூறி பாட்டை மாற்றியுள்ளார்.
பின்பு நடிகர் சிம்புவை வைத்து சைட் அடிப்போம்.. தம் அடிப்போம் பாடல் உருவாக போராடியுள்ளார். இதற்காக தயாரிப்பாளரிடம் பேசிய நிலையில், இப்படத்தின் இந்த பாடலுக்கு மட்டும் 4 லட்சம் ரூபாய் ஸ்ரீகாந்த் கொடுத்துள்ளார். இதே போன்று ஏகப்பட்ட படங்கள் நன்றாக உருவாக அதிகமான பணத்தை இழந்துள்ளாராம்.
நண்பன் படத்தில் செய்த தவறு
நண்பன் படத்தினை ஆறு மாதத்தில் எடுப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் ஆனால் முடிப்பதற்கு 8 மாதங்கள் ஆகிவிட்டதாம்.
இதற்கு காரணம் நடிகர் ஸ்ரீகாந்த்தானாம். என்னவெனில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்படுவதுதெரியாமல், உதவி இயக்குனர் ஒருவரின் பேச்சைக் கேட்டு, தாடி மீசை எல்லாம் ஷேவ் செய்துவிட்டுபடப்பிடிற்கு வந்துள்ளார்.
படப்பிடிப்பில் ஸ்ரீகாந்த்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் கடும் அதிர்ச்சியடைந்ததுடன், எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் நீங்க, கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி வந்து நிற்கிறீர்கள்... உங்களுக்கு ஷேவ் செய்ய வேண்டுமென்றால் படப்பிடிப்பு தளத்திலே வந்து செய்திருக்கலாமே என்று கூறியுள்ளார்.
கடைசி காட்சிகள் படமாக்க இருந்த நிலையில், தனது தாடி மற்றும் மீசை வளர்வதற்கு இரண்டு மாதம் தாமதமாகியதோடு, மற்ற பிரபலங்களில் கால்ஷீட்டும் தன்னால் வீணாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததைக் குறித்து, கூறுகையில், தலைமை பண்பு அப்போதிலிருந்தே அவருக்கு இருக்கின்றது. தேவையில்லாமல் பேச மாட்டார். மற்றவர்கள் பேசுவதை உற்று கவனிப்பார்... சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியவர் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |