மட்டன் சுவையை மிஞ்சும் இலங்கையின் காளான் கறி: உச்சுக்கொட்டும் ரெசிபி இதோ
உலகத்தில் பல இடங்களில் பல விதத்தில் செய்யப்படும் உணவுப்பட்டியலில் காளானும் ஒன்று. இது அசைவத்திற்கு அப்படியே சமமான சுவையில் இருக்கும். காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் பசியும் அடிக்கடி எடுக்காது.
காளான் நம் சருமத்திற்கும் மிகவும் நன்மை தரும். இதை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பது உடல் நலத்திற்கு கேடு கொண்டு வரும்.
இந்த பதிவில் பல சத்துக்கள் நிறைந்த காளானை அசைவ சுவையில் இலங்கை முறையில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்யும் முறை
முதலில் காளானை சாதாரண தண்ணீரில் கழுவி சிறுது சிறிதாக பிய்த்து வைக்க வேண்டும். இதில் உப்பு, மஞ்சள் சேர்த்து பிசைந்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிளகாய் தூளை வறுக்க வேண்டும்.
அதை தனியே எடுத்து வைத்து விட்டு மண்சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணை ஊற்றி அது சூடானதும் அதில் கடுகை போட வேண்டும். கடுகு வெடித்து வரும் பருவத்தில் பூண்டு மற்றும் இஞ்சியை சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் ஏலக்காய், கராம்பு, சேர்த்து வதக்க வேண்டும். இவற்றை ஒரு நிமிடம் வதக்குங்கள். பின்னர் அதில் கறிவேப்பிலை, பட்டை, ரம்பை சேர்க்க வேண்டும். இதனுடன் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி கொஞ்சம் வதங்கிய பின்னர் பச்சமிளகாய், வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் சீரகப்பொடி மற்றும் வறுத்த வெந்தயத்தை சேர்க்க வேண்டும். இவற்றை 3 நமிடங்கள் வறுக்க வேண்டும்.
இவை நன்றாக வதங்கியதும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மிளகாய் பொடியை சேர்க்க வேண்டும். பின்னர் Roasted Curry Powder ஐ சேர்க்க வேண்டும். இவற்றை 1 நிமிடம் வதக்கவும்.
வதக்கிய பின்னர் காளானை சேர்த்து வதக்க வேண்டும். இதை 1 நிமிடம் மூடி வைத்து விட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் மிளகுப்பொடியை சேர்த்து உப்பு தேவை என்றால் சேர்த்து அப்படியே மூடி கொதிக்க விடவும். இப்படி செய்து எடுத்தால் சுவையான காளான் கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |