நாற்காலியிலிருந்து சட்டென கீழே விழுந்த நாக சைதன்யா... மேடையில் நடந்த பகீர் சம்பவம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நாக சைதன்யா, திரைப்பழ விழா ஒன்றில் மேடையில் நாற்காலியிலிருந்து கீழே விழுந்த காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் நாக சைதன்யா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நாக சைதன்யா, சமந்தாவைக் காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.
பின்பு நடிகை சோபிதாவைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர் விருஷகர்மா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரசாத் ஐமேக்ஸ் திரையரங்கில் நடைபெற்றுள்ளது.

அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்த நாக சைதன்யா, மேடையில் உள்ள நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
அப்பொழுது சட்டென நாற்காலி பின்னோக்கி சாய்ந்ததில், நாக சைதன்யாவும் கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிவிட்டதுடன், குறித்த நடிகரும் சட்டென சுதாரித்துக் கொண்டு எழுந்துள்ளார். இக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாக சைதன்யா அமர்ந்ததும், பின்னே ஒரு நபர் வேகமாக சென்ற போது நாற்காலியை தட்டிவிட்டாரா? அல்லது ஏற்பாடு செய்யும் போதே இதனை சரியாக கவனிக்கப்படாமல் விடப்பட்டதா? என்று கேள்வி எழுந்துள்ளது..
When big stars attend an event, proper arrangements should be the first priority.
— YKTV ENTERTAINMENT (@Yktv_Ent) March 5, 2026
The event manager should check everything properly before the event. 🤷#NagaChaitanya #Vrushakarma pic.twitter.com/HHBcxrBfdc
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |