வீட்டில் உருளைக்கிழங்கு இருக்கா? அப்போ இலங்கை முறையில் இந்த கறியை செய்து பாருங்க
உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது.
இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் உருளை கிழங்கு மட்டும் இருந்தால் அதை வைத்து இலங்கை முறையில் இந்த கறியை செய்து பாருங்க சுவை பிரமாதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீட்டமாக வெட்டி கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த கிழங்கில் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, ரம்பை, பச்ச மிளகாய், வறுத்த வெந்தயம், பட்டை, கறி பௌடர், மஞ்சள் பொளடர், சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வேக வைக்க வேண்டும்.
இது நன்றாக வேகிய பின்னர் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். அதை ஒரு பக்கம் கொதிக்க விட்டு இன்னுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.
பின்னர் அந்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறி பௌடர், ரம்பை, கறிவேப்பிலை எல்லாம் கொஞ்சம் சேர்த்து தாளித்து கொதிக்கும் உருளைக்கிழங்கு கறியில் கொட்ட வேண்டும். பின்னார் கறிவேப்பிலை மற்றும் மிளகுப்பொடி மேலால் தூவி அடுப்பில் இருந்து கறியை இறக்கி வைக்க வேண்டும்.
அவ்ளவு தான் இப்போது சுவையான இலங்கை உருளைக்கிழங்கு கறி தயார். இதை சாதம் ரொட்டி போன்ற உணவுகளுடன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
