Sri Lanka Rasam Recipe: மூட்டு வலியை குணமாக்கணுமா? இலங்கையின் இரகசிய ரசம்
வயது செல்ல செல்ல ஒவ்வொருவருக்கும் மூட்டு வலி அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆனால் இதை வீட்டில் கிடைக்கும் உணவுகளை வைத்தே குணப்படுத்த முடியும். அதற்கு தான் இந்த பதிவில் ஒரு ரெசிபி பார்க்கப்போகின்றோம்.
இது இலங்கையில் கிடைக்கும் முடக்கத்தான் கீரையை கொண்டு செய்யப்படும் ரசமாகும். இந்த ரசத்தை குடித்தால் உடலில் இருக்கும் பல கொடிய நோய்கள் விலகும்.
முடக்கத்தான் கீரைக்கு மூட்டு வலியை போக்க கூடிய சக்தி உள்ளது. இதை எப்படி ரசம் வைத்து குடிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மிளகு - 2 டீஸ்பூன்
- வர மிளகாய் - 5
- மல்லி விதை - 2 டீஸ்பூன்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- தக்காளி - 2
- புளி
- பூண்டு - 20 பல்
- உப்பு - 2 டீஸ்பூன்
- முடக்கத்தான் கீரை
செய்யும் முறை
முதலில் உரலில் வரமிளகாய், மல்லி விதை, சீரகம், வரமிளகாய், மிளகு போட்டு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தோலுடன் பூண்டையும் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும்.
இடித்த இந்த பொருட்களை ஒரு மண்சட்டியில் போட்டு அதில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும். பின்னர் இதனுடன் தக்காளியை வெட்டி போட்டு உப்பு போட்டு கைகளை பயன்படுத்தி நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
இதில் முடக்கத்தான் கீரையை போட்டு அடுப்பில் வைக்க வேண்டும். இரண்டு வரமிகளாயையும் இதில் உடைத்து போடலாம். இப்போது இந்த ரசம் நன்றாக கொதித்து வரும்போது கரண்டியால் கிண்டி 5 நிமிடங்களின் பின்னர் இறக்க வேண்டும்.
அவ்வளவு தான். இப்போது இலங்கையில் செய்யப்படும் முடக்கத்தான் ரசம் தயார். இதை மூட்டு வலி உள்ள நபர்கள் குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
