வேர்க்கடலை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது ஏன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல் தொந்தரவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது. நமது தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தவும் உதவுகின்றது.
ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முதுமையை தடுக்கவும் செய்கின்றது.
ஆனால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் வேர்க்கடலையை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிப்பது பல ஆரோக்கிய பிரச்சனையை ஏற்படுத்துமாம்.
தண்ணீர் ஏன் குடிக்கக்கூடாது?
வேர்க்கடலை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் வேர்க்கடலை சரியாக ஜீரணமாகாமல், செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
வேர்க்கடலை சாப்பிட்ட னடனே தண்ணீர் குடித்தால் வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்ற வயிறு சம்பந்தமாக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் வேர்க்கடலையை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருகினால் வெப்பநிலை மாறி சளி மற்றும் இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதுமட்டுமின்றி அஜீரணக் கோளாறும் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது.
வேர்க்கடலை எண்ணெய் தன்மையுடையது என்பதால் அதை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் தொண்டைப்புண், இருமல் ஏற்படும்.
வேர்க்கடலை சாப்பிட்டதும் தண்ணீர் பருகினால் விரைவில் எடை அதிகரிப்பதுடன், வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைக்கும் வழிவகுக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
