இலங்கையில் உருவான ‘MANITHEE – THE FIRE BIRD’ திரைப்படம் : கனடாவில் பிரமாண்ட வெளியீடு
TRM Picture தயாரிப்பில், MJ Nitharsan இயக்கத்தில் இலங்கையில் உருவாகியுள்ள MANITHEE – THE FIRE BIRD திரைப்படத்தின் Grand Release Event, எதிர்வரும் 11 ஒக்டோபர் 2026 அன்று மதியம் 1.00 மணிக்கு, கனடாவின் Scarborough, Toronto பகுதியில் அமைந்துள்ள Woodside Cinemas திரையரங்கில் நடைபெறவுள்ளது.
MANITHEE – THE FIRE BIRD
MJ Nitharsan இயக்கியுள்ள இத்திரைப்படம், அவரது கதை, திரைக்கதை மற்றும் வசன உருவாக்கத்தில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக Pathmayan Siva பணியாற்றியுள்ளதுடன், ஒளிப்பதிவை (DOP) AK Kamal மேற்கொண்டுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும் வகையில் பல்வேறு வெளியீட்டு நடவடிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கனடாவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தமிழ் கலைஞர்கள், திரைப்படத்துறையினர், கலை மற்றும் கலாசார ஆர்வலர்கள், சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான திரு. Kunabalan Nahadeeban தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றது.
மேலும், நிகழ்வைத் தொடர்ந்து கனடாவில் உள்ள தமிழ் கலைஞர்கள் மற்றும் கலாசார சமூகத்தினருடனான சந்திப்புகள், ஊடக சந்திப்புகள் மற்றும் திரைப்பட விளம்பர நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் மற்றும் கலாசார நிகழ்வுகளிலும் திரைப்படக் குழுவினர் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |