சூரியன் பெயர்ச்சியில் காத்திருக்கும் புதிய வாய்ப்பு... எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்
சூரிய பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி
ஜோதிடத்தில் அதிகாரம், தலைமைப் பொறுப்பு, பதவி, புகழ், தொழில் வாழ்க்கையில் அங்கீகாரம் இவற்றிற்கு தொடர்புடைய கிரகமாக சூரியன் கருதப்படுகின்றது.
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போது ஒவ்வொரு ராசியினரின் ஜாதகத்தில் வெவ்வேறான தாக்கத்தினை ஏற்படுத்தும்.

ஒருவரது வேலை, தொழில், பதவி, வருமானம் மற்றும் பணியிட மாற்றம் இவற்றிற்கு தொடர்புடையதாக இருக்கின்றது. சிலருக்கு பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
அந்த வகையில் முன்னேற்றத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு தொழில் தொடர்பாக புதிய முயற்சி கிடைக்கும் நிலையில், நீண்ட நாட்களாக ஒரே பணியிலிருந்து மாற்றத்தினை பெற நினைப்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்குமாம்.
மேலதிகாரிகளின் கவனம் உங்கள் மீது திரும்புவதுடன், பதவி உயர்வு, புதிய பொறுப்பு முக்கியமான திட்டத்தினை வழிநடத்தும் வாய்ப்பினை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக அவசர முடிவுகளை தவிர்ப்பது சிறந்தது.

மிதுனம்
மிதுன ராசியினர் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படுவதுடன், வேலை தேடுபவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பும் கிடைக்கலாம். பணியில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
தகவல் தொடர்பு, ஊடகம், விற்பனை, நிர்வாகம், டிஜிட்டல் துறையில் உள்ளவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தையில் கருத்தை தெளிவாக எடுத்து வைக்கவும்.

சிம்மம்
சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருப்பதால் இந்த ராசியினருக்கு முக்கியமானதாக கருதப்படுகின்றது. தலைமைப் பொறுப்பு, அதிகாரம் மற்றும் அங்கீகாரம் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
பணியிடத்தில் உங்களது திறமையை மேலதிகாரிகளால் பாராட்டப்படலாம். பதவி உயர்வு, புதிய பொறுப்பும் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்கள் நல்ல வளர்ச்சியினையும் பெறலாம்.

துலாம்
துலாம் ராசியினரின் தொழில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதுடன், நீண்ட காலமாக நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறுவதைக் குறித்து தற்போது சிந்திக்கலாம்.
வெளிநாடு அல்லது வேறு நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் இந்த காலம் நல்லதாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியினர் இந்த சூரிய பெயர்ச்சியினால் தொழிலில் புதிய பாதையை அடைவதுடன், வேலை தேடுபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கலாம்.
போட்டி தேர்வு, அரசு வேலையில் முயற்சி செய்பவர்கள் கூடுதல் கவனம் எடுக்கவும். தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
உங்களது செயலினால் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம். புதிய திறமையை கற்றுக்கொள்வது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |