துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: தொழிலில் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என நம்ப்படுகின்றது.
அந்தவகையில், கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, வியாபாரம் ஆகியவற்றுக்கு புதன் காரணியாக விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 24ஆம் தேதி புதன் துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி புதன் துலாம் ராசியில் வக்ரமாவதால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ரமாக உள்ளார். இதனால் தொழில் மாற்றம் அல்லது முன்பு நிறுத்தி வைத்திருந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
தவறவிட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.
சிலருக்கு நிதி ஆதாயமும், பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வாக்குறுதிகளை வழங்கும் முன் நன்கு சிந்தித்த பின்னர் கொடுப்பது சிறப்பு.
மேஷம்

மேஷ ராசியின் 7-ஆம் வீட்டில் புதன் வக்ரமாக உள்ளதால் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். பழைய வணிகத் தொடர்புகள் மீண்டும் ஏற்படுவதுடன், தெளிவான பேச்சுவார்த்தை மூலம் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி ஆதாயமும் கிடைக்கலாம். உறவுகளில் இருந்த தவறான புரிதல்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், எந்த இறுதி முடிவையும் அவசரமாக எடுக்காமல் இருப்பதே நல்லது.
மிதுனம்

மிதுன ராசியின் 5-ஆம் வீட்டில் புதன் வக்ரமாக உள்ளார். புதிய திட்டங்களைத் தொடங்குவதைவிட, ஏற்கனவே நடைபெறும் பணிகளில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து சரிசெய்வது நல்ல பலனைத் தரும்.
வணிகர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கலாம். தடைபட்டிருந்த திட்டங்கள் மீண்டும் சிறப்பாக நடைபெறும். பணியிடத்தில் திறமைகள் அங்கீகரிக்கப்படுவதுடன், சிலருக்கு புதிய பொறுப்புகள் அல்லது சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகரம்

மகர ராசியின் 10-ஆம் வீட்டில் புதன் வக்ரமாக உள்ளார். இதனால் வேலை மற்றும் தொழிலில் முன்பு எடுத்த முடிவுகளில் உள்ள தவறுகளை உணர்ந்து, தேவையான மாற்றங்களை செய்து நல்ல பலனைப் பெற முடியும்.
வணிகர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் இலக்குகளை வெற்றிகரமாக அடைவதுடன், சிலருக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு, மரியாதை அல்லது முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.
நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். இருப்பினும், பெரிய வாக்குறுதிகளை வழங்கும்போது சற்று அவதானத்துடன் இருப்பது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |