பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
வேத ஜோதிடத்தின்படி, தேவர்களின் குருவாகக் கருதப்படுபவர் குரு பகவான். மங்களகரமான கிரகமாக விளங்கும் இவர், தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஓராண்டு காலம் பயணிப்பதால், அவரது பெயர்ச்சி ஒருவரது வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

தற்போது உச்ச ராசியான கடகத்தில் பயணிக்கும் குரு பகவான், அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அங்கு ஏற்கனவே பயணித்து வரும் நிழல் கிரகமான கேதுவுடன் இணைகிறார்.
திடீர் மாற்றங்கள் மற்றும் மர்மங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கேதுவுடன், குரு பகவான் பல ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் இணைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த குரு-கேது சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 5-ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் புதிய நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த பணமும் கைக்கு வரும்.
எதிர்பாராத வழிகளில் வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்குப் புதிய பொறுப்புகளுடன் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்

கடக ராசியின் 2-ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் நிதி மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
வருமானம் அதிகரிப்பதுடன், முதலீடுகள் மூலமும் ஆதாயம் கிடைக்கலாம். நீண்ட கால உழைப்புக்குப் பலனாகப் பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.திடீர் பணவரவும் ஏற்படலாம். இருப்பினும், நிதி முடிவுகளை கவனமாக எடுப்பது அவசியம்.
சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு குறித்த நல்ல செய்திகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகளும் வெற்றிகரமாக முடியும். மேலும், செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
தனுசு

தனுசு ராசியின் 9-ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் கைகொடுப்பதுடன், நிதி நிலையில் எதிர்ப்பாராத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபமும் கிடைக்கலாம். இதுவரை பணப் பிரச்சினைகளால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு, குரு பெயர்ச்சிக்குப் பிறகு நிதி நிலை மேம்பட வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |