விஜய், சிம்பு படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்
விஜய், சிம்பு படங்களில் நடித்த இந்த நடிகை ஒருவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை ரக்ஷிதா
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ரக்ஷிதா, சிம்பு, விஜய் இவர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் கடந்த 2002ம் ஆண்டு புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான அப்பு என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.
பின்பு தெலுங்கு படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் கன்னட ரீமேக்கான Dhumm படத்தில் நாயகியாக நடித்தார்.

2003ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான தம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற சாணக்யா.... சாணக்யா... ஏதோ தந்திரம் செய்தாய் என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல அடையாளத்தை வாங்கிக் கொடுத்தது.

விஜய் நடிப்பில் மதுர படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் எலந்த பழம்... எலந்த பழம் உனக்கு தான் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

கட்சியில் சேர்ந்த நடிகை
இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு ப்ரேம் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவிலிருந்து விலகியதுடன், கடந்த 2014ம் ஆண்டு பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு கன்னட படமான எக் லவ் யா என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பின்பு சினிமாவில் நடிக்கவில்லை.

தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை அதிகரித்து மாறியுள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |