மறக்கமுடியாத பயணத்திற்கான இலங்கையின் 5 இடங்கள்..! கண்டிப்பாக சென்று பாருங்க
உலக வரைப்படத்தில் இந்தியாவின் பிள்ளை என அழைக்கப்படும் தீவு தான் இலங்கை.
இந்த தீவு பார்ப்பதற்கு கண்ணீர் துளி வடிவில் இருப்பதால் இதில் அப்படி என்ன இருக்கின்றது என நினைத்து விடாதீர்கள்.
இயற்கையின் சொர்க்க பூமி இங்கு தான் கடவுள் மறைத்து வைத்திருக்கிறார்.
இயற்கை, கலாச்சாரம் மற்றும் சமையல் இன்பங்களால் நிரம்பிய இந்த அழகான தேசம் எட்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது.
இலங்கைக்குள் புதிதாக வரும் பயணிகளுக்கு என அழகிய கடற்கரைகள், பசுமையான காடுகள், நம்பமுடியாத கடற்கரையை எதிர்கொள்ளும் ரிசார்ட்டுகள் என அற்புதமான இடங்கள் காத்திருக்கின்றன.
அந்த வகையில் அப்படி என்ன தான் இருக்கின்றது இலங்கையில் என நினைக்கும் பயணிகளுக்கு ஒரு சூப்பரான அப்டேட் தெரிந்து கொள்ளுங்கள்.
1. அருகம் பே
சுமாராக 1600 கிலோமீட்டருக்கும் அதிகமான கடற்பரப்பை கொண்டு பயணிகளை வியக்க வைக்கும் கடற்கரை தான் அருகம் பே. வெளிநாடுகளை போல் இங்கு வரும் பயணிகளுக்கு சர்ஃபிங், ஸ்பீட் போடிங், பாராகிளைடிங் மற்றும் அட்ரினலின் ரஷ் போன்ற வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளது.
மேலும் ஓய்வாக படுத்து கடலின் காற்றை சுவாசிக்கலாம். இங்கு செல்லும் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை இலங்கை - அம்பாறை மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
2. யாலா தேசிய பூங்கா
நேரில் வனவிலங்குகளை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த இடமாக இருக்கும். யானையின் பிளிரல்களுடன் பறவைகளின் அழகை பார்த்து ரசிக்கலாம்.
அத்துடன் அடர்ந்த மரகத-பச்சை காடு பல வனவிலங்குகளின் தாயகமாகும். பயணிகளாக வருபவர்கள் கடகமுவ, யாலா ஆகிய இடங்களில் தங்கிக் கொள்ளலாம்.
3. தம்புள்ளை குகைக் கோயில்
இலங்கையின் கலாச்சாரம், ஆன்மீகம், பாரம்பரியம் ஆகியவற்றை துள்ளியமாக தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இங்கு தாராளமாக செல்லாம். பௌத்த மதத்தின் சான்றுகளை இங்கு காணலாம்.
குகையில் இருக்கும் கோயிலில் உட்புறங்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிலைகள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இந்த இடம் பௌத்த தளம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இங்கு வரும் பயணிகள் தம்புள்ளையில் தங்கிக் கொள்ளலாம்.
4. சிகிரியா
இலங்கையில் இருக்கும் பாரம்பரிய இடங்களில் இதுவும் ஒன்று. இந்த பாறையில் ஏறுபவர்கள் செங்குத்தான ஏறுதலை தைரியமாகச் செய்யலாம்.
அத்துடன் ஏறும் போது ஓவியங்களையும் இயற்கையின் கண் கவர் காட்சிகளையும் பார்க்கலாம். அத்துடன் இங்கு வருபவர்கள் மாத்தளை மாவட்டத்தில் தங்கிக் கொள்ளலாம்.
5. பொலன்னறுவை
இந்த இடம் இலங்கையின் வரலாற்றை எமக்கு கூறுகின்றது. அக்காலத்தில் மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு இருக்கும் ஒரே சான்று இந்த இடம் தான்.
நகரத்தின் உயரமான தூண், பண்டைய காலத்தின் தலைசிறந்த கட்டிடக் கலைஞர்களின் பழைய கட்டிடக்கலையும் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |