நக்ஷத்ராவின் வருங்கால கணவர் இவர்தான்- மீண்டும் சர்சசையில் சிக்கிய ஸ்ரீநிதி! கொதித்தெழுந்த ரசிகர்கள்
நடிகை நட்சத்திராவின் இன்ஸ்டா பதிவை பார்த்து நடிகை ஸ்ரீநிதி கேலியாக கமண்ட் செய்து தற்போது சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
நடிகை ஸ்ரீநிதி சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இருந்த யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார்.
அந்த சீரியலின் நாயகியும், தனது தோழியுமான நட்சத்திராவின் திருமணம் குறித்து ஸ்ரீநிதி சில விஷயங்களை பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இது எல்லாம் வதந்தி என்று நட்சத்திரா பதில் கொடுத்திருந்தார்.

நக்ஷத்திரா வெளியிட்ட புகைப்படம்
இந்த நிலையில் நக்ஷத்திரா அவரது வருங்கால கணபவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் ‘Family’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து கேலி செய்யும் விதமாக ஸ்ரீநிதி கமன்ட் செய்து இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை திட்டி தீர்த்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நக்ஷத்ராவை திருமணம் செய்துகொள்ளப்போகும் விஷ்வா ஸ்ரீநிதி குறித்து பேசிய போது ‘இரு வீட்டிலும் சில பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது.
இரண்டு தரப்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் நல்ல ஒரு முடிவு எடுக்கப்படும். நாங்கள் முறைப்படி மீடியாவுக்கு அறிவிக்கலாம் என்று இருக்கிறோம். அவசியம் சொல்லித் தான் செய்வோம்.
அதேபோல் சமீப காலமாக அந்த ஸ்ரீநிதி பொண்ணு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மெண்டலி பாதிக்கப்பட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் குடும்பத்தைப் பற்றி அவர்கள் சொன்னது எதுவுமே உண்மை கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.