நடிகை ஸ்ரீநிதி உடைத்த ரகசியம்! நக்ஷத்ரா வாழ்வில் பிரச்சினையா? நாத்தனாரின் ஓபன் டாக்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடரின் தயாரிப்பாளர் நிவாஷினி திவ்யா சின்னத்திரை ஶ்ரீநிதி குறித்து பேசிய விடயம் நெட்டிசன்கள் மத்தியில் பேசி பொருளாக மாறியுள்ளது.
தயாரிப்பாளர் நிவாஷினி திவ்யா கூறியதாவது,
நானும், நக்ஷத்ராவும் ஒரே சீரியலில் நடிச்சதில்லை. ஆனால் ரியாலிட்டி ஷோவில் அவரை பார்த்திருக்கேன்.

அவர் எப்பவும் நண்பர்களுடன் ஏதாவது பேசி, சிரித்து கொண்டு தான் இருப்பார். பிரைம் டைம் தொடரின் கதாநாயகி என்றபதால் ரொம்ப ஆட்டிட்யூட் இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், பழக ஆரம்பித்த பிறகுதான் அவங்க ரொம்ப ஸ்வீட் என்கிற விடயமே தெரிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருங்கிய நண்பர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு மிகவும் பிடிக்கும். நக்ஷத்ராவின் தோழி ஶ்ரீநிதி பேசிய வீடியோ லைவ் பார்த்தவுடன் நக்ஷத்ராவுக்கு கால் பண்ணி பேசினேன்.
அவங்க ஏன் இப்படி பேசினான்னே தெரியலை என்று கூறினார். அதை நீங்கள் ஃப்ரீயா விடுங்க என்று கூறி அவங்களைச் சமாதானம் செய்தேன்.
ஆனால், அந்த நியூஸ் ரொம்ப தப்பா பரவ ஆரம்பிச்சதும் நானே நக்ஷத்ராகிட்ட நீங்க யாரையும் தப்பா பேச வேண்டாம். ஆனால் நீங்க நன்றாக இருப்பதை உங்கள் ரசிகர்களிடம் கூறிவிடுங்கள் என்று சொன்னேன். அதுமட்டும் இல்லை சித்துவோட ஒப்பிட்டு ஶ்ரீநிதி பேசியது அவங்களை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நட்சத்திரா காதலரின் பெயர் விஷ்வா. ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவரின் சகோதரிதான் தயாரிப்பாளரும், நடிகையுமான நிவாஷினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நக்ஷத்ரா குறித்து லைவ்வில் சர்ச்சையை கிளப்பிய ஶ்ரீநிதி
இதேவேளை, சமீபத்தில் நடிகை ஶ்ரீநிதி அவருடைய தோழி நக்ஷத்ரா குறித்து லைவ் வீடியோவில் சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.
அதில், நக்ஷூ பாதுகாப்பாக இல்லை. அவள் காதலிப்பவர் குடும்பமே அவளை அடைத்து வைத்திருக்கிறது. நக்ஷூவை மீட்க உதவுங்கள் என பல விஷயங்களைப் பேசியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் நக்ஷத்ரா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவை திருமணம் செய்ய கூறி சர்ச்சை
மேலும், நடிகை ஶ்ரீநிதி தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தி நடிகர் சிம்பு வீட்டுக்கு முன்பு போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு பல சர்ச்சையான தகவல்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.