முளைத்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தலாமா? பலரும் அறியாத உண்மை
முளைவிட்ட வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தலாமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெங்காயம்
இந்திய சமையலில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ள வெங்காயம் குளிர்காலத்தில் முளைத்துவிட ஆரம்பிக்கும்.
அதாவது வெங்காயத்தின் முனைப்பகுதியில் பச்சை நிறத்தில் தளிர் வெளியே வந்து முளைத்திருக்கும். ஆனால் இதனை சமையலுக்கு பயன்படுத்தலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.
ஆம் முளைத்த வெங்காயத்தினை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் சிலருக்கு இதன் வாசனை, சுவை பிடிக்காது என்பதால் ஒதுக்கி வைக்கின்றனர்.

ஏன் ஒதுக்குகின்றனர்?
முளைத்த வெங்காயத்தின் சுவை மற்றும் மனம் இரண்டு மாறுபடுபதுடன், அதன் ஊட்டச்சத்தும் மாறுபடுகின்றது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் பைடோகெமிக்கல்கள் நிறைந்துள்ளது.
இதிலுள்ள தாதுக்கள் அப்படியே இருந்தாலும், இதனை சமையலுக்கு பயன்படுத்தும் முன்பு சில விடயங்களை கவனிக்க வேண்டுமாம்.

முளைத்த பகுதியை நீக்கிவிட்டி சமையலுக்கு சேர்த்துக் கொள்ளலாம். சாதாரணமாக முளைகட்டியிருந்தால் அதில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும், அதுவே அழுகி இருந்தால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்படுகின்றது.
வெங்காயத்தை நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் அல்லது வெப்பமான பகுதியில் சேமித்து வைத்தால் முளைவிடாமல் பாதுகாக்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |