உங்களுக்கு நாக தோஷம் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் காட்டும் தெரியுமா?
ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது.
நாக தோஷம்
உங்கள் கனவில் தினசரி சண்டை, சச்சரவுகள் வருவதாக உணர்ந்தால் அது கால சர்ப்ப தோஷத்தின் அறிகுறியாகும்.
நீங்கள் காரணமின்றி இரவில் மீண்டும் மீண்டும் அச்சமுற்று எழுந்தால் அது இந்த தோஷத்தின் அறிகுறிகள் ஆகும்.
உறங்கும் போது இறந்தவர்கள் கனவில் தோன்றி பிரச்சனை செய்தாலோ, யாரோ கழுத்தை நெரிப்பது போல அடிக்கடி உணர்ந்தாலோ, கனவில் பாம்பு அடிக்கடி வந்து கடிப்பதை பார்த்தாலோ இந்த தோஷம் இருப்பது உறுதியாகும்.
இந்த தோஷம் இருப்பவர்கள் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் விடுபடலாம். சனிக்கிழமை அன்று ஓடும் நீரில் நிலக்கரி துண்டுகளையோ, பருப்பு, முழு தேங்காயை மிதக்க வைத்தாலோ தோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது.
அமாவாசை நாட்களில் வெள்ளி நாகத்தை வழிபட்டு, ஆற்றில் அவற்றை மிதக்க விட வேண்டும்.
மேலும், அமாவாசை நாட்களில் காகம், நாய், பசுக்களுக்கு உணவு அளிப்பதும் நன்மை தரும். இதில் இருந்து எளிதில் விடுபட வேண்டும் என்றால் வீட்டில் மயில் தோகை வைத்திருப்பது நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |