டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளி பதக்கத்தை வென்றார் பவினா
டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறது. கடந்த 24 ஆம் தேதி முதல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினாபென் பட்டேலுக்குவெள்ளி பதக்கத்தை வென்றிருக்கிறார்.
டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சீன வீராங்கனை ஜோயிங்கிடம் தோல்வியடைந்தார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினாபென் பட்டேல். டோக்கியோ பாராலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் சீன வீராங்கனை மியாவ் ஜாங்கை 3-2 செட் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறிச் சென்றார்.
இன்று இறுதி போட்டியில் சீன விராங்கனை ஜோவ் யிங்கிடம் 3- 0 செட் கணக்கில் தோல்வியை தழுவியதால் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருக்கிறது. இருந்தாலும், டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.
