கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா!

Heart Disease Kidney Problems Spinach Benefits Hemoglobin Prostate Cancer பசலைக்கீரை பயன்கள் பசலைக்கீரை
By Vinoja Jul 02, 2026 05:48 AM GMT
Report

நமது உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு அனைத்து வகையான சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைப்பது மிகவும் அவசியம்.அதற்காக தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் கீரைகளை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை கீரை வகைகளை உணவில் சேர்ப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. கோடைக்காலத்தில் உடல் வெப்பம் அதிகரிப்பதால், நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்ல தேர்வாக இருக்கும்.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கிறது.

பசலைக்கீரையின் வகைகள்

கொடிப்பசலை

குத்துப்பசலை

தரைப்பசலை

வெள்ளைப் பசலை

சிலோன் பசலை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

இவற்றில் குத்துப்பசலை மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியது. இதனை சிறுபசலை, பசறை போன்ற பெயர்களாலும் அழைக்கின்றனர். இதன் இலைகள் தடிமனாகவும் முக்கோண வடிவத்திலும் காணப்படும். ஊட்டச்சத்து நிறைந்த பசலைக்கீரை பசலைக்கீரையில் வைட்டமின் A, C, K, ஃபோலேட், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

மேலும் லுடின் போன்ற சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. ஒமேகா-3 கொழுப்பு அமிலமும் குறைந்த அளவில் காணப்படுவதால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு ஆதரவாக இருக்கிறது.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

பசலைக்கீரையின் ஆரோக்கிய நன்மைகள்

1.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்

பசலைக்கீரையில் உள்ள வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில்  பெரிதும் ஆற்றல் காட்டுகின்றது.

பசலைக்கீரையை  வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும்.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

2. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்

பசலைக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளதால், இரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகை அபாயத்தைக் குறைக்கவும், ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் உதவும்.

3. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் இருப்பதால், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பசலைக்கீரை உதவுகிறது. நார்ச்சத்தும் இதய நலனுக்கு ஆதரவாக உள்ளது.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

4. கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்

பலுடின் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களை பாதுகாக்கும் முக்கிய சத்துகளாகும். வயது முதிர்வால் ஏற்படும் சில கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

5. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்

கால்சியம் மற்றும் வைட்டமின் K அதிகம் இருப்பதால், எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிக்கவும் பற்களின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இது நல்ல உணவாகும்.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

டீயுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத 5 உணவுகள் என்னென்ன தெரியுமா? எச்சரிக்கும் மருத்துவர்கள்

6. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

பசலைக்கீரையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைக் குறைக்கவும் குடலின் இயல்பான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் மலச்சிக்கலைத் தடுக்க துணைப்புரியும்.

7. உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும்

கோடைக்காலத்தில் பசலைக்கீரையை பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியளிக்க உதவுகிறது. உடலின் நீர்ச்சத்தைப் பராமரிக்கவும் உதவும்.

8. பெண்களின் உடல்நலத்திற்கு நல்லது

பசலைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் பெண்களின் பொது உடல்நலத்திற்கு உதவுகின்றன. சில பாரம்பரிய மருத்துவ முறைகளில், தாய்ப்பால் சுரப்பை ஆதரிக்க  துணைப்புரியும்.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

9. கர்ப்பிணிப் பெண்களுக்கு

கர்ப்பகாலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகளைப் பெற உதவுகிறது. இது தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆதரவாக இருக்கிறது.

10. மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நல்லது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஃபோலேட் மற்றும் பிற தாதுக்கள் மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

கோடைக்காலத்தில் ஏன் பசலைக்கீரை அவசியம்? இவ்வளவு நன்மைகள் இருக்கா! | Spinach Benefits In Tamil

எந்தப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது?

எந்தப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது?

பசலைக்கீரையை எப்படி சாப்பிடலாம்?

பருப்புடன் சேர்த்து கீரைக் கடையலாக கூட்டு அல்லது பொரியலாக சூப்பாக சப்பாத்தி அல்லது தோசையுடன் சேர்த்து ஸ்மூத்தி அல்லது ஜூஸாக (அளவோடு) எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு-  பசலைக்கீரையில் ஆக்சலேட் (Oxalate) என்ற இயற்கைச் சேர்மம் இருப்பதால், சிறுநீரகக் கற்கள் உருவாகும் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதற்கான அபாயம் இருப்பவர்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் அளவோடு சாப்பிடுவது நல்லது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US