மணமணக்கும் காரசாரமான வறுத்து அரைத்த மிளகு குழம்பு
கருப்பு மிளகு இல்லாத சமையலறையே நாம் காண முடியாது. இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.இது மாசாலாப்பொருட்கில் ஒன்றாக வருகின்றது. இந்த மிளகை சமைக்கும் போது உணவின் சுவையை அதிகரிக்க இதை பயன்படுத்துவார்கள்.
தென்னிந்தியாவில் கேரளா, கோவா மற்றும் கர்நாடகாவில் அதிகம் விளைகிறது. ரோம், கிரீஸிலும் உள்ளது. மத்திய காலங்களில் இது பிரபலமானது. உலகின் 39 சதவீத மிளகு உற்பத்தி வியட்நாமில் இருந்து கிடைக்கிறது.
இதை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் உண்பதற்கான காரணம் இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நோய்கள் வருவதை தடுக்கிறது.
சளி பிரச்சனையை தடுத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இப்படிப்பட்ட மிளகை வதை்து மசாலா அரைத்து வறுத்து அரைத்த மிளகு குழம்பு! எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மசாலா விழுது அரைக்க
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- வரமல்லி – 2 ஸ்பூன்
- கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
- பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 3 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 4 பல்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- வரமிளகாய் – 5
- மிளகு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
- கடுகு – ஒரு ஸ்பூன்
- வெந்தயம் – அரை ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 20
- பூண்டு – 20
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- புளிக்கரைசல் – ஒரு கப்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- கல் உப்பு – 3 ஸ்பூன்
- வெல்லம் – 2 ஸ்பூன்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை எண்ணெய் சேர்த்து அதை அடுப்பில் வைத்து அது டானவுடன், வரமல்லி, கடலை பருப்பு, பச்சரிசி, மிளகு சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இவை சிறிது நேரம் வறுபட்டவுடன், பூண்டு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வறுக்கவேண்டும்.
இவை நன்றாக ஆறியவுடன் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துதனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும். இதில் கடுகு பொறிய ஆரம்பித்தவுடன் பெருங்காயத் தூள், சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அவை பொன்னிறமானவுடன், அடுப்பை குறைந்த தீயில் வைத்து புளி தண்ணீரை ஊற்றி கலந்து விடவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து புளி தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
இதன் பின்னர் நீங்கள் அரைத்த மசாலாவை சேர்த்து தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்துவிட்டு குறைந்த தீயிலே அடுப்பை கொதிக்கவிடவேண்டும். இப்படி செய்து எடுத்தால் மணக்க மணக்க சுவையான மிளகு குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |