இரத்த விருத்திக்கு எதவும் சுவையான இறால் தொக்கு - ஒருமுறை இப்படி செய்ங்க
கடல் உணவில் இறால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறாலில் குழம்பு பொரியல் வறுவல் என பல வகை செய்யலாம். ஆனால் தொக்கு செய்தால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
இறாலில் புரதம், வைட்டமின் D, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இவை மூளை ஆரோக்கியம், எலும்பு வலிமை மற்றும் இரத்த விருத்திக்கு உதவுகின்றன.
எனவே இறாலில் கமகம மணத்துடன் பத்தே நிமிடத்தில் இறால் தொக்கு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- இறால் - ½ கிலோ (சுத்தம் செய்து குடல் நீக்கியது)
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- குழம்பு மசாலா - 3 ஸ்பூன்(அல்லது மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், மிளகாய் தூள் - 2 ஸ்பூன், சோம்பு - அரை ஸ்பூன்)
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- கரம் மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

செய்முறை
இறால் தொக்கு செய்ய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் சேர்த்து அது சூடானதும், சோம்பு சேர்க்கவும்.
அதனுடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் குழம்பு மசாலாவை சேர்க்கவும்.
(அல்லது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்) பின்பு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கவும்.

அத்துடன் சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து கிளறி வேகவிடவும்.
இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான இறால் தொக்கு ரெடி.
இதை சூடான சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவை தாறு மாறாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |