அதிக நேரம் ஏசியில் இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க
நீண்ட நேரம் ஏசி-யில் இருந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பலரும் வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாமல் வீட்டில் ஏசி-போட்டுக்கொண்டு தான் பொழுதை கழிக்கின்றனர். அதிலும் கோடை வெயிலில் ஏசி-யின் செயல்பாடும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
பெரும்பாலான வீடுகளில் ஏசி என்பது அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. ஆனால் அதிக நேரம் ஏசியில் இருந்தால் என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏசி கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் அதே வேளையில், அவை பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம்.
ஏசி-பயன்படுத்தினால் என்ன தீமைகள்?
அதிக நேரம் ஏசி-யில் இருப்பதால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து, சருமம் மற்றும் கண்கள் வறண்டு போகின்றது. இதனால் தோல் அரிப்பு மற்றும் எரிச்சல், வறட்சி ஏற்படுகின்றது. கண்களில் வறட்சி ஏற்படும் போது கண் எரிச்சல், சிவத்தல் பிரச்சினை ஏற்படுகின்றது.
ஏசி-யிலிருந்து வரும் குளிர்ந்த காற்று தசைகள் மற்றும் மூட்டுகளை கடினமாகிவிடுவதால், ரத்த ஓட்டமும் குறைகின்றது. இது அளெகரியத்தை ஏற்படுத்துவதுடன், கீல்வாதம் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு இன்னும் பிரச்சினை அதிகமாகின்றது.
அறை முழுவதும் உள்ள இடங்களில் காற்று சுழல்வதால், துசி, ஒவ்வாமை மற்றும் பிற துகள்களை சிக்க வைப்பதுடன், இதனால் ஆஸ்துமா, சுவாசக்கோளாறு ஏற்படுகின்றது. ஆதலால் அதிக நேரம் ஏசி-யில் இருப்பதை தவிர்க்கவும்.
இதே போன்று ஏசி-யில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் நுண்ணுயிர் அசுத்தங்கள் குவிவதற்கு வாய்ப்புள்ளதுடன், சுவாசிப்பது மற்றும் பிற நோய்களின் அபாயத்தை ஏற்படுத்துகின்றது.
அதிக நேரம் குளிரில் இருப்பதால் தலைவலி மற்றும் சோர்வுக்கு பங்களிப்பதுடன், குளிர்ந்த காற்றானது ரத்த நாளங்களை சுருக்கி, மூளைக்கு செல்லுத் ரத்த ஓட்டத்தை குறைக்கின்றது. இதனால் தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு உடல் பிரச்சினையும் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |