Baakiyalakshmi: ராதிகா அம்மாவிடம் வந்து சிக்கிய ஈஸ்வரி! மாறிமாறி சண்டையிடும் காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவிற்கும், ஈஸ்வரிக்கும் இடையே பயங்கர போர் உருவாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பத்தால் கோபியை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
கோபியுடன் சேர்ந்து அவரது தாய் ஈஸ்வரியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். ஏற்கனவே ராதிகாவின் அம்மா அவரது வீட்டில் தங்கியுள்ள நிலையில், தற்போது ஈஸ்வரிக்கும் அவருக்கும் போர் உருவாகி வருகின்றது.
நாளுக்கு நாள் உருவாகும் இந்த சண்டை எப்பொழுது முடிவுக்கு வரும், ராதிகா கூறியது போன்று இரண்டு நாட்களில் ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |