உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்! மில்லின் இதயங்களை வென்ற காட்சி
இன்றைக்கு உள்ள விஞ்ஞான வளர்ச்சியில், உலகில் எந்த மூலையில் என்ன சுவாரஸ்சியமான விஷயங்கள் நடந்தாலும் நொடியில் நம் கண்முன்னே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது சோசியல் மீடியாக்கள்.
அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவி ஸ்வாதி மாலிவால் தன்னுடைய ட்விட்டரில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் ஸ்வீக்கி டெலிவரி ஏஜென்டாக இருந்த மாற்றுத்திறனாளி பெண், தங்களுக்காக உள்ள ப்ரத்யேக டூவிலரில் அமர்ந்த படி பயணித்துள்ளார்.

தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சவாலான டெலிவரி ஏஜென்டாக பணியைத் தேர்வு செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் ஸ்விக்கி உணவு பையை டூவிலரின் பின்புறம் வைத்துக் கொண்டு அசால்டாக வண்டியை ஓட்டிச்செல்வது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6 நிமிட வீடியோவாக இருந்தாலும் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
बेशक मुश्किल है ज़िन्दगी... हमने कौनसा हार मानना सीखा है! सलाम है इस जज्बे को ♥️ pic.twitter.com/q4Na3mZsFA
— Swati Maliwal (@SwatiJaiHind) September 10, 2022