தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்திய குரு - சிஷ்யன் இழப்பு : நடக்கவிருக்கும் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி
தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990-களில் கிராமிய மணம் மிக்க, தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களின் இதயத்தில் அழியாத இடம்பிடித்தவர் இயக்குநர் பாரதிராஜா.
தனது படங்களின் மூலம் மட்டுமல்லாமல், "என் இனிய தமிழ் மக்களே" என்ற தனித்துவமான வரவேற்பு வார்த்தையாலும் ரசிகர்களின் மனதில் தனி முத்திரை பதித்தவர்.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு
ஒரே மாதத்தில் இரண்டு இழப்புகள்
உடல்நலக் குறைவு காரணமாக சில காலமாக வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஜூன் 10ஆம் தேதி காலமானார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
அவரது மறைவை இன்னும் பலரும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் நிலையில், அவரது சிஷ்யராக அறியப்படும் கே. பாக்யராஜ் அவர்களும் உயிரிழந்ததாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடிகை குஷ்புவின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு ஆரோக்கியமாக காணப்பட்டதாக கூறப்படும் கே. பாக்யராஜ், தனது மனைவியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றாக இருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சி
ஒரே மாதத்தில் குரு–சிஷ்யனாக அறியப்பட்ட பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகிய இருவரின் மறைவு ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய சம்பவமாக பேசப்படுகிறது.
இருவரின் சினிமா பயணம், சாதனைகள் மற்றும் அவர்களைப் பற்றிய நினைவுகளை பல திரைப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் "மகா நடிகை" நிகழ்ச்சியில் "குரு–சிஷ்யன்" என்ற தலைப்பில் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |