வீட்டில் சாதம் மீதமாகிவிட்டதா? அப்போ இப்படி தேங்காய் சாதம் செய்ங்க
வீட்டில் சாதம் மீதமாகிவிட்டால் அதை குப்பையில் கொட்டாமல் ஒரு ஆரொக்கியமான சுவையான தேங்காய் பால் சாதம் செய்யலாம். இதை செய்ய அதிக நேரம் தேவைப்படாது.
அதிக பொருட்களும் தேவைப்படாது. ஆனால் மற்ற உணவுகளை விட இந்த தேங்காய் சாதம் மிகவும் சுவையாக இருக்கும். இந்த தேங்காய் சாதத்தை தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக செய்வார்கள்.
இதை செய்தால் மதிய உணவை அற்புதமாக முடிக்கலாம். இப்போது இந்த தேங்காய் சாதம் செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 150 கிராம்/1 கப் சமைத்த மீதமுள்ள அரிசி
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 முழு சிவப்பு மிளகாய்
- 7-8 கறிவேப்பிலை
- ½ தேக்கரண்டி கடுகு
- 2 தேக்கரண்டி நெய்
- மற்றும் நட்சத்திர சோம்பு
- ஜாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற முழு மசாலாப் பொருட்கள்
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- ½ தேக்கரண்டி சீரக விதைகள்
- 1 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு
- மற்றும் 1 தேக்கரண்டி கடலை பருப்பு
செய்யும் முறை
இந்த எளிதான தேங்காய் சாதம் செய்ய முதலில் ஒரு முட்கரண்டியை எடுத்து சாதத்தை தனிதனியாக உதிர்த்தி வைக்கவும். பின்னர் ஒரு தேங்காய் எடுத்து அதை துருவி தனியே எடுத்து வைக்கவும்.
அடுத்ததாக தேவையான காய்கறிகளை எடுத்து அதை சாதம் செய்ய ஏற்றவாறு குட்டி குட்டியாக நறுக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நெய் கடுகு முழு மிளகாய் மற்றும் கடலைப்பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்.
பின்னர் இதில் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களுடன் சேர்ந்து கலந்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் சாதம் தேங்காய் துருவல் மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான தேங்காய் சாதம் தயார். இதை சட்னியுடன் சாப்பிட்டால் சுவை பிரமாதம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |