15 மனைவிகளுடன் விமான நிலையத்திற்கு வந்த மன்னர்- பார்த்து மிரண்டு போன அபுதாபி
அபுதாபி விமான நிலையத்திற்கு தென்னாபிரிக்க மன்னர் தன்னுடைய 15 மனைவிகளுடன் வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு உள்ளது.
இந்த நாட்டை கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் மன்னர் மூன்றாம் எம்ஸ்வாதி ஆட்சி செய்து வருகிறார்.
இவர், உலக பணக்காரர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறது. இவரிடம் சுமாராக 1 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இப்படியொரு உல்லாச வாழ்க்கையா?
இவ்வளவு பிரபலமாக இருக்கும் மன்னர், எஸ்வாட்டினி நாட்டில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளார்.
எம்ஸ்வாதி மன்னர் தன்னுடைய 15 மனைவிகள் மற்றும் 30 குழந்தைகளுடன் வரும் காட்சியை பார்த்தவர்கள் மிரண்டு போயுள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளியும் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்திற்காக அபுதாமி சென்ற மன்னர், குடும்பத்தினருடன் வரும் காட்சியை பார்ப்பதற்கு சற்று வியப்பாகவே இருந்தது.
மூன்றாம் எம்ஸ்வாதி மன்னர் அவர்களுடைய தந்தை 70-க்கும் மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்ந்து 210 குழந்தைகளையும், 1000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |