சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படம் : இவர் தான் ஹீரோவாம்...!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சவுரவ் கங்குலி
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தான் சவுரவ் கங்குலி. இவர் 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய டெஸ்ட் வெற்றி சதவீதம் 42.85ஆக பதிவானது.
1999ம் ஆண்டு டவுண்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சவுரவ் கங்குலி 183 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
இவர் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றபோது பல மாற்றங்களை கொண்டுவந்தார். அணி வீரர்களை சரியான முறையில் வழிநடத்தினார்.
அவர்களுக்கு நல்ல கேப்டனாக திறம்பட செயல்பட்டால். அப்போது, அடுத்த கட்டத்திற்கு இந்திய அணியை முன்னேற்ற சில வீரர்கள் தேவைப்பட்டனர். அப்போதுதான், அவர் சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் மற்றும் ஆசிஸ் நெஹ்ரா போன்ற வீரர்களை தேர்வு செய்தார்.
இந்த வீரர்கள் தான் பின்னாளில் மிகச் சிறந்த வீரர்களாக மாறினார்கள். ஒருவருடைய திறமையை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் சவுரவ் கங்குலியை மிஞ்ச ஆளே கிடையாது. சவுரவ் கங்குலி முன்னாள் பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார். இவரை தாதா என்று அனைவரும் அன்போடு அழைக்கின்றனர்.
சவுரவ் கங்குலியின் பயோபிக்
இந்நிலையில், சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் முடிவு செய்துள்ளாராம்.
இதனையடுத்து, இது தொடர்பாக கங்குலியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு நடிகர் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கவைக்க கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஆனால், இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.