ஷூட்டிங் சிகரெட் பிடிப்பேன்.. நடிகை சோனியா அகர்வாலை பற்றி அதிர்ச்சி கொடுத்த நடிகர்!
நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த இவர், இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்தார்.
இதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சோனியா அகர்வால் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.
சிகரெட் பிடிப்பார்
இந்நிலையில், சோனி அகர்வாலை பற்றி எப்பொழுதும் சர்ச்சைக்கான தகவலை தரும், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கனாதன், சோனியா அகர்வால் படப்பிடிப்பிற்கு வரும்போதே சிகரெட் பிடித்துக்கொண்டே தான் வருவார் என தெரிவித்தார்.
மேலும், சூட்டிங் நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும், சிகரெட் பிடித்துக்கொண்டு தான் இருப்பார்.
படக்குழுவினர்கள் கேட்டால், உனக்கு என்ன? நான் சரியாக நடிக்கிறேனா அதை மட்டும் பாருங்க என கூறிவிடுவாராம் என பயில்வான் ஷாக் தகவலை கூறியுள்ளார்.