பிக்பாஸ் நடிகை இறப்பில் திடீர் திருப்பம் - கொலை செய்யப்பட்டாரா? சகோதரர் அதிர்ச்சி புகார்;
இந்தி பிக்பாஸ் 14வது நிகழ்ச்சியின் மூலம் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை சோனாலி போகத்(41). இவர் கடந்த 22ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
கோவாவுக்கு விடுமுறையை கழிக்க தனது கூட்டாளிகளுடன் சென்றபோது மாரடைப்பால் இறந்ததாக போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது.
மர்ம மரணம்
இந்நிலையில், இவரின் இறப்பில் திடீர் திருப்ப ஏற்பட்டுள்ளது., சோனாலி மரணம் அறிந்து அவரது குடும்பத்தினர்கள் கோவா சென்ற நிலையில், நடிகை சோனாலி தனது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா திடுக்கிடும் புகார் கூறி உள்ளார்.

சகோதரர் புகார்
இதுகுறித்து, அவர் தெரிவிக்கையில், “மரணத்திற்க்கு முன்பு சோனாலி அம்மாவிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் கலக்கத்துடன் தனது 2 கூட்டாளிகள் மீது புகார் அளித்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
தொடர்ந்து அரியானாவில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், மடிக்கணினி, முக்கிய பொருட்கள் யாவும் காணாமல் போய் உள்ளன.

எனவே என் சகோதரியின் பிரேத பரிசோதனையை டெல்லி அல்லது ஜெய்ப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நடத்துவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நடிகை சோனாலி சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அரியானா எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் கொடுத்து வருகின்றன.