அல்லு அர்ஜீனுக்கு மகன் எழுதிய கடிதம்.. இதயம் தொட்ட பதிவால் குஷியான ரசிகர்கள்
மகன் எழுதிய கடிதத்தை பகிர்ந்து எமோஷனலான அல்லு அர்ஜுனின் பாசம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
புஷ்பா-2
இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த புஷ்பா-2 திரைப்படம் வெளியாகி வெற்றிநடைப் போட்டு கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் பாட்னாவில் வெளியிடப்பட்ட புஷ்பா-2 ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புஷ்பா படத்தில் கதாநாயகர் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுனின் தோற்றமும், கச்சிதமான உடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
42 வயதான அல்லு அர்ஜுன் அவரது வசீகரிக்கும் தோற்றம், மின்னல் வேகா நடனம் மற்றும் ஈர்க்கக்கூடிய உடலமைப்பு சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இந்த படத்தில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது தோற்றம் கம்பீரமாக உள்ளது என கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
இதயம் கவர்ந்த பதிவு
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது மகன் அயான், தனக்கு எழுதிய கடிதத்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில்,“ஒரு அப்பாவாக நான் செய்த மிகப்பெரிய சாதனை இதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் உள்ளது.
எனவே, எனது மகன் சின்ன குழந்தை எனவும், கடிதத்தில் அவனது எழுத்துப் பிழைகள் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்..” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
மகன் எழுதிய கடிதம்
அந்த கடிதத்தில், “ அன்புள்ள அப்பா, இந்தக் கடிதத்தை நான் எழுதக் காரணமே, உங்களை நினைத்து நான் எவ்வளவு பெருமைப்படுகின்றேன், உங்களால் நான் எவ்வளவு பெருமைப்படுகின்றேன் என்பதை உங்களிடம் கூறுவதற்காகத்தான். உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
குறிப்பாக சினிமாவிற்காக உங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, வெற்றி என அனைத்தும் என்னையும் பெருமைப்படுத்துகின்றது. நீங்கள் நம்பர் 1 இடத்தில் இருக்கும் போது நான் உலகத்தின் உயரத்தில் பறப்பதைப்போல் உணர்கின்றேன்.” என எழுதியுள்ளார்.
இந்த கடிதம் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
