ஒதுக்கி வைத்த மக்கள்! 45 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த 23 வயது மகன்
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் தந்தை உயிரிழந்த நிலையில் தனது 45 வயது தாய்க்கு மகன் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.
தந்தையை இழந்த தாய்
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர் யுவராஜ் (23). கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், தாய் ரத்னா தனியாக வேலைக்கு சென்று குடும்பத்தினை கவனித்து வந்துள்ளார்.
தந்தையின் இறப்பிற்கு பின்பு உறவிர்கள் யாரும் தாய் ரத்னாவை எந்தவொரு நிகழ்ச்சிக்கு அழைக்காமல் இருந்துள்ளனர். மனரீதியாக கஷ்டப்பட்ட தாயினை அவதானித்த மகன் தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார்.
தாயை மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க வைக்க யோசித்த மகன், தனது நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் தாய்க்கு துணையை தேட ஆரம்பித்துள்ளார். அப்பொழுது மாருதி கணவத் என்ற நபரின் அறிமுகம் கிடைத்த நிலையில், அவர் ரத்னாவை திருமணம் செய்யவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
குறித்த திருமணத்திற்கு முதலில் மறுப்பு தெரிவித்த ரத்னா, பின்பு சம்மதம் தெரிவித்த நிலையில், இவருக்கும் மறுமணம் செய்து வைத்துள்ளார் மகன். ஆம் மகன் யுவராஜின் முன்னிலையில் தாய் ரத்னாவிற்கும், மாருதி கணவத்துக்கும் திருமணம் சிறப்பாக நடந்துள்ளது.